அண்னன் - தம்பி
அன்னையின் அரவணைப்பில் அனிச்சம் பூவாக
பூத்துக்
கிடக்கும் தம்பிதனைக் கண்டதும்,
தான் இதுவரைக் கண்டிதிராத
மகிழ்வினைக்
கண்டதுபோல் மனம் மயிலாடி, புன்னகைப் புரண்டோடி,
அவன் விரல் பிடித்து , அன்னைக்கு முன்னதே
இவன் என் தம்பியம்மா என மனம் மழுவி,
அக்கம் பக்கம் அனைவருக்கும் இவன் என்
தமையன்
என மார்த் தட்டி,
இதுவரை
விளையாண்டப் பொம்மைகளைப்
போ என துரந்து , தம்பிதனை
தைஞ்சமாய்க் கிடந்து
அவனோடு
விளையாடி, இன்புற்று,
இதுவரையில் தன் மேல் விழுந்த ஒட்டுமொத்த
அன்னை, தந்தையரின் பாச
மழை
தமயன் மேல் விசத் தொடங்கியதும்
கடுப்பேறி கை நீட்டத்
தொடங்குவான்
அரியும்
பருவம் வரையாக,
என்ன தான் கைகழப்பு இருந்தாலும்
அன்னியரின் கைப் பட
அனுமதியான்,
தான்
அடிமைகொண்ட கெட்டொழுக்கச் சேற்றினை
தான் மரைத்து , நல்லதனைப் போதிக்கும்
போதகனாகி
தன் ஆசை துறந்து ,அவன்
ஆசை கான
எப்பொழுதும் அக்கரைக்
கண் அவன் மேலே வீசி
காலமும்
தோழாக தொற்றிருப்பான் தோழனைப்
போல.... அண்னன்.....
வரிகள் : சின்னத்துரை
No comments:
Post a Comment